கோழைத்தனமான வன்முறை- காஷ்மீர் தாக்குதலுக்கு விஜய் கண்டனம்

தமிழ்நாட்டு சகோதரர்கள் உட்பட அப்பாவி உயிர்களைப் பலிகொண்டது குறித்து ஆழ்ந்த வேதனை அடைகிறேன்.கோழைத்தனமான மற்றும் இழிவான வன்முறைச் செயலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
கோழைத்தனமான வன்முறை- காஷ்மீர் தாக்குதலுக்கு விஜய் கண்டனம்
Published on

சென்னை:

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள், சுற்றுலாப்பயணிகள் மீது நடத்திய தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. பகல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய இந்த கொடூர தாக்குதலில் 26 பேர் பலியாகியுள்ளனர். இதில் வெளிநாட்டு பயணிகளும் அடங்குவர் என்று சொல்லப்படுகிறது. மேலும் பலர் காயம் அடைந்துள்ளனர். ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற கொடூர தாக்குதலுக்கு தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், இந்த சம்பவத்திற்கு தவெக தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார் இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

ஜம்மு-காஷ்மீரின் பகல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல், நமது தமிழ்நாட்டு சகோதரர்கள் உட்பட அப்பாவி உயிர்களைப் பலிகொண்டது குறித்து ஆழ்ந்த வேதனை அடைகிறேன். இந்த கோழைத்தனமான மற்றும் இழிவான வன்முறைச் செயலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது மனமார்ந்த இரங்கலையும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனைகளையும் செய்கிறேன் என தெரிவித்துள்ளார் .

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com