2026-லும் வென்று கழக ஆட்சி தொடர உறுதியேற்போம்! - உதயநிதி

தமிழ்ச்சமூகத்தின் இதயத்துடிப்பாய் இன்றும் வாழும் முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்தநாள்.கலைஞரின் பிறந்தநாளை செம்மொழி நாளாக கொண்டாடி அவர் புகழ் போற்றுவோம்.
2026-லும் வென்று கழக ஆட்சி தொடர உறுதியேற்போம்! - உதயநிதி
Published on

மறைந்த தி.மு.க. தலைவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 102-வது பிறந்த நாள் விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

கருணாநிதி பிறந்தநாள் செம்மொழி நாளாக கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் அனைத்து மாவட்டங்களிலும் இந்த விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.

கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம் சூட்டி உள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

தமிழ்ச்சமூகத்தின் இதயத்துடிப்பாய் இன்றும் வாழும் முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்தநாளை செம்மொழி நாளாக கொண்டாடி அவர் புகழ் போற்றுவோம், 2026-லும் வென்று கழக ஆட்சி தொடர உறுதியேற்போம்!

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com