SIR-க்கு எதிராக த.வெ.க. கண்டன ஆர்ப்பாட்டம்

சிவானந்தா சாலையில் த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர்கள், மாநில நிர்வாகிகள் மற்றும் திரளான தொண்டர்கள் பங்கேற்றனர்.
SIR-க்கு எதிராக த.வெ.க. கண்டன ஆர்ப்பாட்டம்
Published on

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு தமிழக வெற்றிக்கழகம் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இந்த பணிகளை கண்டித்து த.வெ.க. தலைவர் விஜய் உத்தரவின்பேரில், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வழிகாட்டுதலின் பேரில் இன்று தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை சிவானந்தா சாலையில் த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா, மாவட்ட செயலாளர்கள், மாநில நிர்வாகிகள் மற்றும் திரளான தொண்டர்கள் பங்கேற்றனர்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், SIR நடவடிக்கையில் குளறுபடிகள் இருப்பதாகக் கூறி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com