த.வெ.க தலைவர் விஜய் தலைமையில் மாமல்லபுரத்தில் இன்று செயல் வீரர்கள் கூட்டம்

கிறிஸ்துமஸ் விழாவிற்கு பிறகு எந்த ஒரு அரசியல் நிகழ்விலும் விஜய் பங்கேற்கவில்லை.சிபிஐ விசாரணை, ஜனநாயகன் சென்சார் பிரச்சனைகளுக்கு இடையே, செயல் வீரர்கள் கூட்டம்.
த.வெ.க தலைவர் விஜய் தலைமையில் மாமல்லபுரத்தில் இன்று செயல் வீரர்கள் கூட்டம்
Published on

மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள செயல் வீரர்கள் கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் உரையாற்ற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் 18ம் தேதி அன்று நடந்த கிறிஸ்துமஸ் விழாவுக்கு பிறகு 38 நாட்கள் கழித்து அரசியல் பேச விஜய் தயாராக இருக்கிறார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிறிஸ்துமஸ் விழாவிற்கு பிறகு எந்த ஒரு அரசியல் நிகழ்விலும் விஜய் பங்கேற்கவில்லை.

இந்நிலையில், சிபிஐ விசாரணை, ஜனநாயகன் சென்சார் பிரச்சனை நீடித்து வரும் நிலையில் ஜனவரி 25ம் தேதி (இன்று) தவெக செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

அதன்படி, தவெக தலைவர் விஜய் தலைமையில் மாமல்லபுரத்தில் செயல் வீரர்கள் கூட்டம் மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள நிலையில், ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com