த.வெ.க தலைவர் விஜய் வரும் செப்.13ம் தேதி முதல் பிரச்சார சுற்றுப்பயணம்

தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் 10 வாரங்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டம்.த.வெ.க. தலைவர் விஜய் அந்தந்த பகுதி பிரச்சனைகள் குறித்து பேச திட்டம்.
த.வெ.க தலைவர் விஜய் வரும் செப்.13ம் தேதி முதல் பிரச்சார சுற்றுப்பயணம்
Published on

வரும் செப்டம்பர் 13-ம் தேதி திருச்சியில் த.வெ.க தலைவர் விஜய் சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, தமிழ்நாடு முழுவதும் தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் 10 வாரங்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அமைப்பு ரீதியாக ஒரு நாளில் 2 மாவட்டங்களில் பிரச்சாரப் பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.

சுற்றுப்பயணத்தின்போது த.வெ.க. தலைவர் விஜய் அந்தந்த பகுதி பிரச்சனைகள் குறித்து பேச திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

முதற்கட்டமாக 5 வாரங்களுக்கு சுற்றுப்பயணம் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, முதல் வாரம்- திருச்சி, பெரம்பலூர், அரியலூர், திருவள்ளூரில் சுற்றுப்பயணம் எனவும், 2வது வாரம் திருவள்ளூர், செங்கல்பட்டு, 3வது வாரத்தில் தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை, 4வது வாரம்- திருப்பூர், ஈரோடு, நீலகிரி; 5வது வாரம்- திருப்பத்தூர், தருமபுரி உள்ளிட்ட இடங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com