நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் | NEET

'நீட்' தேர்வு குறித்த அறிவிப்பு கடந்த மாதம் 7-ந்தேதி வெளியிடப்பட்டு, விண்ணப்பப்பதிவு 8-ந்தேதி முதல் தொடங்கியது. விண்ணப்பிப்பதற்கு 11-ந்தேதி (இன்று) வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டது.
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் | NEET
Published on

சென்னை:

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு 'நீட்' தேர்வு மதிப்பெண் அவசியம். அந்த தேர்வில் மாணவ-மாணவிகள் பெறும் மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.

அந்தவகையில் 2026-27-ம் கல்வியாண்டுக்கான மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு 'நீட்' தேர்வு குறித்த அறிவிப்பு கடந்த மாதம் (பிப்ரவரி) 7-ந்தேதி வெளியிடப்பட்டு, விண்ணப்பப்பதிவு 8-ந்தேதி முதல் தொடங்கியது. விண்ணப்பிக்க முதலில் கடந்த 8-ந்தேதி கடைசிநாள் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் அவகாசம் வழங்க மாணவ-மாணவிகள், பெற்றோரிடம் இருந்து கோரிக்கைகள் எழுந்தன.

அதனை கருத்தில் கொண்டு, விண்ணப்பிப்பதற்கு 11-ந்தேதி (இன்று) வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டது. அதன் படி, இன்றுடன் (புதன்கிழமை) விண்ணப்பப்பதிவு நிறைவு பெற உள்ளது. மேலும் அவகாசம் வழங்கப்படாது என தேர்வை நடத்தக்கூடிய தேசிய தேர்வு முகமை திட்டவட்ட மாக ஏற்கனவே தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com