GOLD PRICE TODAY: வார தொடக்கத்தில் மீண்டும் உச்சம் தொட்ட தங்கம் விலை - இன்றைய நிலவரம்

சுபநிகழ்ச்சிகளுக்காக தங்கம் வாங்க நினைப்போருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.தங்கத்துக்கு போட்டியாக உயர்ந்து வரும் வெள்ளி விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
GOLD PRICE TODAY: வார தொடக்கத்தில் மீண்டும் உச்சம் தொட்ட தங்கம் விலை - இன்றைய நிலவரம்
Published on

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தில் விற்பனையாகி வருகிறது. இதனால் சுபநிகழ்ச்சிகளுக்காக தங்கம் வாங்க நினைப்போருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

நேற்று முன்தினம் தங்கம் விலை கிராமுக்கு 50 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,280-க்கும் சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 240 ரூபாய்க்கும் விற்பனையானது. நேற்று தங்கம் விலை ஒரு கிராம் ரூ.13,280-க்கும், ஒரு சவரன் 1,06,240-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில் வார தொடக்கத்தில் தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. கிராமுக்கு 170 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,450-க்கும், சவரனுக்கு 1,360 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்துக்கு போட்டியாக உயர்ந்து வரும் வெள்ளி விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. வெள்ளி விலையும் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 8 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 318 ரூபாய்க்கும், பார் வெள்ளி 3 லட்சத்து 18 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

18-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,06,240

17-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,06,240

16-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,840

15-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,06,320

14-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,06,240

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

18-1-2026- ஒரு கிராம் ரூ.310

17-1-2026- ஒரு கிராம் ரூ.310

16-1-2026- ஒரு கிராம் ரூ.306

15-1-2026- ஒரு கிராம் ரூ.310

14-1-2026- ஒரு கிராம் ரூ.307

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com