கரூர் கூட்ட நெரிசல் விவகாரம்: தமிழக பொறுப்பு டி.ஜி.பி. பேட்டி

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் மொத்தம் 38 பேர் உயிரிழந்தனர். தவெகவினர் கேட்டதன் அடிப்படையிலேயே இடம் ஒதுக்கப்பட்டது என்றார்.
கரூர் கூட்ட நெரிசல் விவகாரம்: தமிழக பொறுப்பு டி.ஜி.பி. பேட்டி
Published on

சென்னை:

கரூரில் தவெக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 38 பேர் உயிரிழந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழக பொறுப்பு டி.ஜி.பி. வெங்கட்ராமன் நள்ளிரவில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் மொத்தம் 38 பேர் உயிரிழந்தனர். ஆண்கள் 12, பெண்கள் 16, ஆண் குழந்தைகள் 5, பெண் குழந்தைகள் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

அவர்கள் முதலில் அனுமதி கேட்டது லைட்ஹவுஸ் ரவுண்டானா மற்றும் உழவர்சந்தை பகுதியில்தான். அது இதைவிட நெரிசலான பகுதி.

இந்தக் கூட்டத்திற்கு 10,000 பேர்தான் வருவதாக சொன்னார்கள். ஆனால் 27,000 பேர் குவிந்திருந்தார்கள். கூடுதலாக ஆட்கள் வருவார்கள் என்று முன்கூட்டியே கணித்து காவலர்கள் எண்ணிக்கையை அதிகரித்திருந்தோம்.

மதியம் 3 மணிக்கு வந்து இரவு 10 மணிக்கு புறப்பட வேண்டிய விஜய், இரவு 7.50 மணிக்குதான் வந்தார். ஆனால் அக்கட்சி தலைமையின் டுவிட்டர் பக்கத்தில் விஜய், காலை 11 மணிக்கு வருவார்கள் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் ரசிகர்கள் 11 மணிக்கே குவிய தொடங்கினர். ஆனால் விஜய் 7.50 மணிக்குதான் வந்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெறுகிறது. விசாரணை முடிவில் காரணம் தெரிய வரும் என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com