தனியார் பள்ளிகளில் அரசியல், மதம் சார்ந்த நிகழ்வுகள் நடத்த தடை - தமிழ்நாடு அரசு உத்தரவு

தனியார் பள்ளிகளில் மதம் தொடர்பான பிரச்சாரங்கள் நடத்தப்படுவதாகப் புகார்கள் எழுந்தனதனியார் பள்ளிகள் ஒழுங்குமுறை விதிகளில் திருத்தம் செய்து தமிழ்நாடு அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது
தனியார் பள்ளிகளில் அரசியல், மதம் சார்ந்த நிகழ்வுகள் நடத்த தடை - தமிழ்நாடு அரசு உத்தரவு
Published on

தனியார் பள்ளிகளில் அரசியல், மதம் சார்ந்த நிகழ்வுகள் மற்றும் பிரிவினையை தூண்டும் நிகழ்வுகளை நடத்த தடை விதித்து தமிழ்நாடு அரசு அரசிதழ் வெளியிட்டுள்ளது.

தனியார் பள்ளிகளில் மதம் தொடர்பான பிரச்சாரங்களோ அல்லது அரசியல் கூட்டங்களோ நடத்தப்படுவதாகப் புகார்கள் எழுந்த நிலையில் தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறை விதிகளில் திருத்தம் செய்து தமிழ்நாடு அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது.

அதன்படி மதவாதத்தைத் தூண்டும் வகையிலோ அல்லது குறிப்பிட்ட சாதி, இனம், மொழி அடிப்படையில் மாணவர்களிடையே கசப்புணர்வை உருவாக்கும் வகையிலோ எந்தச் நிகழ்ச்சிகளும் பள்ளிகளில் நடத்தக்கூடாது என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

அதே சமயம் கலாச்சார விழாக்கள், ரத்த தான முகாம்கள் மற்றும் சமூக சேவை தொடர்பான நிகழ்ச்சிகளைப் பள்ளிகளில் நடத்தலாம். ஆனால், அவை மதச்சார்பற்ற முறையிலும், எந்தவொரு அரசியல் சாயமும் இல்லாமலும் நடத்தப்பட வேண்டும். மேலும், இத்தகைய நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு முன்னதாக உரிய அரசு அதிகாரிகளிடம் அனுமதி பெறவேடனும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com