மறைந்த எல்.கணேசன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி

எல்.கணேசன் 3 முறை எம்.எல்.ஏ.வாகவும், இரு முறை எம்.பி.யாகவும் இருந்துள்ளார்.எல்.கணேசன் உடல் தஞ்சாவூர் கண்ணந்தங்குடி கீழையூரில் அடக்கம் செய்யப்பட உள்ளது.
மறைந்த எல்.கணேசன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி
Published on

மொழிப்போர் தளபதி என்றழைக்கப்பட்ட தி.மு.க. உயர்நிலை செயல் திட்ட குழு உறுப்பினர் எல். கணேசன் காலமானார். அவருக்கு வயது 92.

வயது மூப்பால் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில் இன்று காலமானார். 1965-ல் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் முதன்மைத் தளபதியாக வழிநடத்திய எல்.கணேசன் மிசா சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டவர்.

மொழிப்போரில் ஈடுபட்டு மிசா சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட எல்.கணேசன் 3 முறை எம்.எல்.ஏ.வாகவும், இரு முறை எம்.பி.யாகவும் இருந்துள்ளார். எல்.கணேசன் உடல் தஞ்சாவூர் கண்ணந்தங்குடி கீழையூரில் அடக்கம் செய்யப்பட உள்ளது.

இந்நிலையில், மறைந்த திமுக மூத்த நிர்வாகி மொழிப்போர் தியாகி எல்.கணேசன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

மேலும், துக்கத்தில் இருந்த அவரது குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com