சென்சார் போர்டுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இப்படம் ஜனவரி 9 அன்று திரைக்கு வரும் என படக்குழு அறிவித்திருந்தது.தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடைவிதித்து விசாரணையை ஜன.21க்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
சென்சார் போர்டுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
Published on

ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள திரைப்படம் 'ஜனநாயகன்'. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இப்படம் ஜனவரி 9 அன்று திரைக்கு வரும் என படக்குழு அறிவித்திருந்தது.

ஆனால் தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் எழுந்தது. இந்நிலையில், மனுவிசாரணை 3.30க்கு தொடங்கியது. அப்போது, சான்றிதழ் பெற இன்னும் கொஞ்ச நாள் காத்திருந்திருக்கலாம் எனக்கூறி படத்திற்கு U/A சான்றிதழ் வழங்க உத்தரவிடக்கோரிய தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடைவிதித்து விசாரணையை ஜன.21க்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

இந்நிலையில், மத்திய தணிக்கை வாரியத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

CBI, ED, IT வரிசையில் சென்சார் போர்டும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் புதிய ஆயுதமாக மாறியுள்ளது. கடுமையான கண்டனங்கள்!

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com