சட்டசபையில் ஆளுநர் உரையை வாசித்த சபாநாயகர்

வறுமையை முற்றிலும் ஒழிக்க முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.மீனவர்கள் உரிமையை பாதுகாக்க அரசு முழு முனைப்பு கொண்டுள்ளது.
சட்டசபையில் ஆளுநர் உரையை வாசித்த சபாநாயகர்
Published on

சட்டசபையில் உரையாற்றாமல் ஆளுநர் ஆர்.என்.ரவி புறப்பட்ட நிலையில் ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். அவர் உரையில் கூறியதாவது:

* பிரதமர் வீட்டு வசதி திட்டத்தில் மாநில அரசின் பங்களிப்பு 60 சதவீதம்.

* ஊரக பகுதிகளில் 10 ஆயிரம் கி.மீ. சாலைகளை மேம்படுத்த நடவடிக்கை.

* வறுமையை முற்றிலும் ஒழிக்க முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

* மிகவும் பின்தங்கியுள்ள மக்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

* பால் கொள்முதல் விலை 6 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

* தமிழகத்தில் தரிசு நிலங்கள் விளைநிலங்களாக மாற்றப்பட்டுள்ளன.

* மீனவர்கள் உரிமையை பாதுகாக்க அரசு முழு முனைப்பு கொண்டுள்ளது.

* இலங்கையில் சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க தொடர்ந்து வலியுறுத்தல்.

* தமிழ்நாட்டில் 2 ஆண்டுகளில் வறுமை முற்றிலும் ஒழிக்கப்படும்.

* கிராமப்புற சாலை வசதி திட்டத்தின் மூலம் ரூ.4,000 கோடியில் 9,653 கி.மீ. சாலைகள் சீரமைப்பு.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com