திருப்பரங்குன்றம் தொடர்பான கோர்ட் அவமதிப்பு வழக்கில் தலைமைச் செயலாளர் ஆஜராக உத்தரவு

கோவில்களில் இதைச் செய்யக்கூடாது, இதைச் செய்ய வேண்டும் என யாரும் சொல்லமுடியாது என தமிழக அரசு வாதிட்டது.தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று வழக்கை ஒத்திவைக்கிறேன் என்றார்.
திருப்பரங்குன்றம் தொடர்பான கோர்ட் அவமதிப்பு வழக்கில் தலைமைச் செயலாளர் ஆஜராக உத்தரவு
Published on

மதுரை:

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணிலும் தீபத்தை ஏற்ற போதிய முன்னேற்பாடு செய்யாத அலுவலர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரிய வழக்கு மதுரை ஐகோர்ட்டில், தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசு சார்பில் வாதிடுகையில், "மேல்முறையீட்டு வழக்கு முடியும்வரை காத்திருக்க வேண்டும். அதற்குள் திரி, எண்ணெய், மலை எங்கும் போய்விடாது. நீதிபதி உத்தரவு சரியா, தவறா என்பதற்கே மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. எப்படி இடைக்கால உத்தரவு கோர முடியும். கோவில்களில் இதைச் செய்யக்கூடாது, இதைச் செய்ய வேண்டும் என யாரும் சொல்லமுடியாது. கோர்ட் கூட சொல்லமுடியாது. தேவஸ்தானமே முடிவுசெய்ய இயலும். இதுகுறித்த விரிவான உத்தரவுகள் உள்ளன. பிரச்சனை வந்தால் கோர்ட்டை காரணம் காட்ட இயலாது. அரசே பொறுப்பேற்க வேண்டும். சட்டம்-ஒழுங்கை கருத்தில் கொள்ள வேண்டும். மேல் முறையீட்டு வழக்கு விசாரணைக்கு வரவுள்ளதால் அதன்பின் இந்த வழக்கை பட்டியலிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கூறுகையில், "திருப்பரங்குன்றம் வழக்கு தீபம் ஏற்றும் உரிமை சார்ந்தது மட்டுமல்ல, சொத்து உரிமை தொடர்பானதும் கூட. தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று வழக்கை ஒத்திவைக்கிறேன். ஆனால் அடுத்த முறை விசாரணைக்கு வரும்போது இடைக்கால உத்தரவு பெறப்படவில்லை எனில் அப்போதும் ஒத்திவைக்க இயலாது" என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தொடர்ந்து நடந்த விசாரணையின்போது திருப்பரங்குன்றம் தொடர்பான கோர்ட் அவமதிப்பு வழக்கில் வரும் 17-ம் தேதி தலைமைச் செயலாளர், மதுரை மாநகர டிஜிபி ஆகியோர் காணொலியில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என நோட்டீஸ் பிறப்பித்து ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com