'விஜய்க்கும், நான் பாடியதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை' - மன்னிப்புக் கோரினார் பாடகர் வேல்முருகன்!

ஒருவேளை நான் தவறாக பாடியதுபோல் தோன்றினால் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுகொள்கிறேன்இந்து முன்னணி மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
'விஜய்க்கும், நான் பாடியதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை' - மன்னிப்புக் கோரினார் பாடகர் வேல்முருகன்!
Published on

தமிழக வெற்றிக் கழகத்தின் 3-ஆம் ஆண்டு தொடக்க விழாவில், "மருதமலை மாமணியே முருகையா" என்ற புகழ்பெற்ற முருகன் பக்திப் பாடலை விஜய்க்கு ஏற்றவாறு மாற்றிப் பாடியிருந்தார் நாட்டுப்புற பாடகர் வேல்முருகன். இது முருகப் பக்தர்களின் மனதைப் புண்படுத்தியதாக இந்து முன்னணி மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் சார்பில் சேலம், நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்ட காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது.

மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் பாடல் வரிகளை மாற்றியதற்குத் தூண்டுதலாக இருந்ததாகக் கூறி, தவெக தலைவர் விஜய் மற்றும் அக்கட்சி நிர்வாகிகள் மீதும் இந்தப் புகாரில் நடவடிக்கை எடுக்கக் கோரப்பட்டுள்ளது. இந்நிலையில் இதற்கு மன்னிப்புக் கோரியுள்ளார் பாடகர் வேல்முருகன். இதுதொடர்பாக பேசியுள்ள அவர், 

"நான் பாடியதற்கும், விஜய்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை. முருகரை தவறாக பாடுவது என்பது என்னை நானே கத்தியால் குத்திக் கொள்வதற்கு சமம். இதற்கும், அக்கட்சி தலைவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நானும் தவறாக பாடவேண்டும் என்பதற்காக பாடவில்லை. ஒருவேளை நான் தவறாக பாடியதுபோல் தோன்றினால் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுகொள்கிறேன்." என தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com