UPSC | சாதனை சிகரத்தில் 'நான் முதல்வன்': UPSC தேர்வில் வென்ற 56 பேருக்கு முதலமைச்சர் நேரில் பாராட்டு

நான் முதல்வன் திட்டத்தில் படித்த 60 பேரில் 56 பேர் தேர்ச்சி.நாம் எடுத்த முயற்சிகளுக்கு தற்போது பலன் கிடைக்க ஆரம்பித்துள்ளது.
UPSC | சாதனை சிகரத்தில் 'நான் முதல்வன்': UPSC தேர்வில் வென்ற 56 பேருக்கு முதலமைச்சர் நேரில் பாராட்டு
Published on

நான் முதல்வர் திட்டத்தின் மூலம் யுபிஎஸ்சி-ல் தேர்ச்சி பெற்றவர்கள் உள்ளிட்ட 60 பேருக்கு தமிழ்நாடு அரசு சார்பில் பாராட்டு விழா நடைபெற்று வருகிறது.இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறைப்புரையாற்றி வருகிறார்.

நான் முதல்வன் திட்டத்தில் படித்த 60 பேரில் 56 பேர் ஐஏஎஸ், ஐபிஎஸ் பணிக்கான குடிமைப்பணி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

யுபிஎஸ்சி தேர்வுகளில் வெற்றி பெறுபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தோம்.

நாம் எடுத்த முயற்சிகளுக்கு தற்போது பலன் கிடைக்க ஆரம்பித்துள்ளது.

அதிகாரிகள் என்றாலே அதட்டலுடன் இருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது.

சாதாரண மக்களுடன் அன்பாகவும், பண்பாகவும் அதிகாரிகள் நடந்து கொள்ள வேண்டும்.

எவ்வளவு பிசியாக இருந்தாலும் பெற்றோருடன் 5 நிமிடமாவது பேச வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com