சட்டென மயங்கி விழுந்த அதிமுக மாவட்டச் செயலாளர்.. சட்டை செய்யாமல் பேச்சை தொடர்ந்த இ.பி.எஸ்

அவரின் அருகில் நின்றிருந்த திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் சிறுணியம் பலராமன் மயங்கி விழுந்தார். சிறுணியம் மயங்கி விழுந்ததை பொருட்படுத்தாமல் எடப்பாடி பழனிச்சாமி தனது பேச்சை தொடர்ந்தார்.
சட்டென மயங்கி விழுந்த அதிமுக மாவட்டச் செயலாளர்.. சட்டை செய்யாமல் பேச்சை தொடர்ந்த இ.பி.எஸ்
Published on

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கவரைப்பேட்டையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

தனது பரப்புரை வாகனத்தில் நின்று எடப்பாடி பழனிசாமி பேசிக் கொண்டிருந்தபோது வாகனத்தில் அவரின் அருகில் நின்றிருந்த திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் சிறுணியம் பலராமன் உடல்நலக்குறைவு காரணமாக திடீரென மயங்கி விழுந்தார்.

மயங்கிய மாவட்ட செயலாளர் சிறுணியம் பலராமனை அருகில் நின்றிருந்த முன்னாள் அமைச்சர் ரமணா கைத்தாங்கலாக எழுப்பி பேருந்திற்குள் அனுப்பி வைத்தார். சிறுணியம் மயங்கி விழுந்ததை பொருட்படுத்தாமல் எடப்பாடி பழனிச்சாமி தனது பேச்சை தொடர்ந்தார்.

சிறிது நேரம் பேருந்தில் ஓய்வெடுத்த சிறுணியம், உரையை முடித்து புறப்படும் போது எடப்பாடி பழனிசாமிக்கு சால்வை அணிவித்து வீர வாள் பரிசளித்தார். மணியம் மயங்கி விழுந்ததும், பழனிச்சாமி பொருட்படுத்தாமல் பேச்சை தொடர்ந்ததும் வீடியோவில் பதிவாகி உள்ளது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com