'நான் முதல்வன் திட்டத்திற்கு நன்றி' - யுபிஎஸ்சி தேர்வில் 2ம் இடம்பிடித்த மதுரை மாணவி!

நிதியுதவியுடன் மட்டுமல்லாமல், 'நான் முதல்வன்' குழு சிறந்த ஆசிரியர்களின் ஒத்துழைப்பையும் வழங்குகிறது.இது ஒரு நீண்டபயணம். இப்போது சாத்தியமாகி உள்ளது.
'நான் முதல்வன் திட்டத்திற்கு நன்றி' - யுபிஎஸ்சி தேர்வில் 2ம் இடம்பிடித்த மதுரை மாணவி!
Published on

2025-ஆம் ஆண்டிற்கான மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்  நடத்திய குடிமைப்பணித் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் முதல் 10 இடங்களில் இடம்பெற்றிருந்தனர். அதில் அகில இந்திய அளவில் இரண்டாம் இடம்பிடித்தவர்தான் மதுரையைச் சேர்ந்த ராஜேஸ்வரி சுவே. இவர் தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டத்தின்கீழ் பயிற்சிப் பெற்றவர்.

இந்நிலையில் தனது இந்த வெற்றித் தொடர்பாக பேசியுள்ள அவர், 

"இந்திய அளவில் இரண்டாம் இடம்பிடித்தது ஆச்சரியமாக இருந்தது. நான் 2018-ல் கல்லூரி முடித்தேன். இது ஒரு நீண்டபயணம். இப்போது சாத்தியமாகி உள்ளது.

தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டத்திற்கு நன்றிக்கூரவேண்டும். நான் இந்த திட்டத்தின் முதல் பேட்ச் மாணவி. 2024-ல், முதல்நிலைத் தேர்விற்கான (Prelims) நிதியுதவி வழங்கப்பட்டவர்களில் நானும் ஒருவளாக தேர்ந்தெடுக்கப்பட்டேன். அப்போது 10 மாதங்களுக்கு மாதம் 7,500 ரூபாய் வழங்கினர். பின்னர், 2025-ல் நான் முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு, முதன்மைத் தேர்விற்காக (Mains) பயிற்சி பெற்றேன்; அப்போது சுமார் 25,000 ரூபாயும், நேர்முகத் தேர்விற்கு 50,000 ரூபாயும் நிதியுதவி அளித்தனர்.

இந்த நிதியுதவியுடன் மட்டுமல்லாமல், 'நான் முதல்வன்' குழு சிறந்த ஆசிரியர்களின் ஒத்துழைப்பையும் வழங்குகிறது. தமிழ்நாட்டில் கல்வி சார்ந்த ஆதரவு மிகப்பெரியது. நான் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர். எனது அப்பா ஒரு தொழிலதிபர். என் அம்மா துணை கணித பேராசிரியர். "  என தெரிவித்தார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com