அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில் தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 12 அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு உள்ளனர்.
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை
Published on

சென்னை:

வாக்குச்சாவடி முதல் நிலை முகவர்கள் பயிற்சி முகாம் டெல்லியில் வருகிற 22 மற்றும் 23-ந்தேதிகளில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் தமிழ்நாட்டில் இருந்து அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் வாக்குச்சாவடி முதல் நிலை முகவர்கள் கலந்து கொள்கின்றனர்.

அந்த கூட்டத்தில் கலந்து கொள்ள செல்பவர்களுக்கு தேர்தல் ஆணையம் சார்பில் செய்யப்படவுள்ள முன் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை மேற்கொள்வதற்காக சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில் தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தி.மு.க., அ.தி.மு.க., தே.மு.தி.க., சி.பி.ஐ., நாம் தமிழர் கட்சி, விடுதலை சிறுத்தைகள், இந்திய தேசிய காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பா.ஜ.க., பகுஜன் சமாஜ் கட்சி, ஆம் ஆத்மி உள்ளிட்ட 12 அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com