ஓ.பன்னீர்செல்வம் பேட்டியளித்தபோது ரோஜா பூவை சாப்பிட்ட ஆதரவாளர்

ஜெயலலிதா படத்துக்கு பூ போட்டு வைக்கப்பட்டு இருந்தது. இது மற்ற நிர்வாகிகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.
ஓ.பன்னீர்செல்வம் பேட்டியளித்தபோது ரோஜா பூவை சாப்பிட்ட ஆதரவாளர்
Published on

போடியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்துக் கொண்டு இருந்தபோது அவருக்கு அருகில் ஜெயலலிதா படத்துக்கு பூ போட்டு வைக்கப்பட்டு இருந்தது.

படத்திற்கு கீழே இருந்த ரோஜாபூவை ஓ.பி.எஸ். ஆதரவாளரும் முன்னாள் மாவட்ட செயலாளருமான சையது கான் எடுத்து வாயில் போட்டு சாப்பிட்டபடி இருந்தார்.

ஓ.பன்னீர்செல்வம் உருக்கமாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை பற்றி பேசிக் கொண்டு இருந்தபோது அதை பொருட்படுத்தாமல் இவர் ரோஜாபூவை ஸ்நாக்ஸ் சாப்பிடுவதைப்போல ஒவ்வொன்றாக எடுத்து சுவைத்துக் கொண்டு இருந்தார். இது மற்ற நிர்வாகிகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com