சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம் - சீரமைப்பு பணிகள் தீவிரம்

விபத்தில் காரில் இருந்தவர்கள் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.மெட்ரோ ரெயில் பணிகளால் சாலையில் பள்ளம் ஏற்பட்டதாக தகவல் பரவியது.
சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம் - சீரமைப்பு பணிகள் தீவிரம்
Published on

சென்னை திருவான்மியூர்- தரமணி சாலையில் நேற்று வாகனங்கள் சென்று கொண்டிருந்தபோது திடீரென பெரிய பள்ளம் ஏற்பட்டது. இதில் பள்ளத்தில் வெள்ளை நிற கார் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் இருந்தவர்கள் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கிடையே, மெட்ரோ ரெயில் பணிகளால் சாலையில் பள்ளம் ஏற்பட்டதாக தகவல் பரவியது.

இதுதொடர்பாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் அளித்த விளக்கத்தில்,

சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்திற்கும் மெட்ரோ ரெயில் சுரங்கப் பணிகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை. விபத்து நடந்த இடத்தில் இருந்து 300 மீட்டர் தொலைவில் தான் மெட்ரோ ரெயில் பணிகள் நடைபெற்று வருகிறது என்று தெரிவித்து உள்ளது.

இந்த நிலையில் திருவான்மியூர்- தரமணி சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தை சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com