#LPGShortage அடுப்பங்கரையிலும் எதிரொலிக்கும் சர்வதேச போர் பதற்றம் -சு.வெங்கடேசன் எம்.பி.,

ஒரு சிலிண்டர் பதிவு செய்த 25 நாட்களுக்குப் பிறகே அடுத்த சிலிண்டர் பதிவு செய்ய முடியும். ஹோட்டல்களின் கோரிக்கையை ஆய்வு செய்ய குழு அமைப்பு.
#LPGShortage அடுப்பங்கரையிலும் எதிரொலிக்கும் சர்வதேச போர் பதற்றம் -சு.வெங்கடேசன் எம்.பி.,
Published on

அமெரிக்கா- ஈரான் இடையேயான போரால் இந்தியாவில் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் ஒரு எல்பிஜி சிலிண்டர் வாங்கியபின் மற்றொரு சிலிண்டர் வாங்குவதற்கான கால இடைவெளியை 21 நாட்களிலிருந்து 25 நாட்களாக மத்திய அரசு உயர்த்தியது.

சமையல் எரிவாயு தட்டுப்பாடு நிலவி வரும் சூழலில் சிலிண்டர்களை பதுக்கி கள்ளச் சந்தையில் விற்பதை தவிர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில், மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

"வீட்டு உபயோகத்திற்கு முன்னுரிமை.

ஒரு சிலிண்டர் பதிவு செய்த 25 நாட்களுக்குப் பிறகே அடுத்த சிலிண்டர் பதிவு செய்ய முடியும்.

ஹோட்டல்களின் கோரிக்கையை ஆய்வு செய்ய குழு அமைப்பு.

சர்வதேச அளவில் நிலவும் அரசியல் பதற்றங்கள் நேரடியாக நம் வீட்டு அடுப்பங்கரையிலும், அன்றாட உணவிலும் எதிரொலிக்கத் தொடங்கிவிட்டன," என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com