'கமலாலய வேலைகளை பார்ப்பது கவர்னருக்கு அழகல்ல' - நயினார் நாகேந்திரனுக்கு சு.வெங்கடேசன் பதிலடி

ஆளுநரை மத்திய-மாநில அரசுகளுக்கு இடையேயான தபால்காரர் என முதலமைச்சர் விமர்சிப்பது அவர் வகித்து வரும் பதவிக்கு அழகல்ல. பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் பதில் அளித்துள்ளார்.
'கமலாலய வேலைகளை பார்ப்பது கவர்னருக்கு அழகல்ல' - நயினார் நாகேந்திரனுக்கு சு.வெங்கடேசன் பதிலடி
Published on

மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற ஆளுநரை மத்திய-மாநில அரசுகளுக்கு இடையேயான தபால்காரர் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சிப்பது அவர் வகித்து வரும் பதவிக்கு அழகல்ல என்று பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறி இருந்தார்.

இந்த நிலையில் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

"ஆளுநரை தபால்காரர் என்று கூறுவது முதல்வருக்கு அழகு அல்ல... " - நயினார் நாகேந்திரன்

ராஜ்பவனில் உட்கார்ந்து கொண்டு "எனது கமலாலய வேலைகளை நீங்கள் பார்ப்பது கவர்னருக்கு அழகல்ல" என்று சொல்லுங்களேன் நயினார் நாகேந்திரன்!

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com