முதலமைச்சரை சிறுமைப்படுத்த நினைப்பவர்கள் சிறுமைப்பட்டு போவார்கள் - சபாநாயகர்

பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் விஜயை கைது செய்து சிறையில் அடைத்திருப்பார். எந்த தலைவரும் தன் தொண்டன் இறக்க வேண்டும் என எண்ண மாட்டார் என பேசியவர் முதல்வர்.
முதலமைச்சரை சிறுமைப்படுத்த நினைப்பவர்கள் சிறுமைப்பட்டு போவார்கள் - சபாநாயகர்
Published on

நெல்லையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* கரூர் விவகாரத்தில் முதலமைச்சரை சிறுமைப்படுத்த நினைப்பவர்கள் சிறுமைப்பட்டு போவார்கள்.

* பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் விஜயை கைது செய்து சிறையில் அடைத்திருப்பார்.

* கரூர் நெரிசலில் 41 பேர் இறந்தபோது துண்டை காணோம், துணியை காணோம் என ஓடினர்.

* எந்த தலைவரும் தன் தொண்டன் இறக்க வேண்டும் என எண்ண மாட்டார் என பேசியவர் முதல்வர்.

* முதலமைச்சரின் பெருந்தன்மையை சாதாரண மக்கள் பாராட்டி கொண்டிருக்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com