செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் உயர்வு

அணையில் இருந்து 500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவான 3,645 மில்லியன் கடிஅடியில் நீர் இருப்பு 2,926 மில்லியன் கன அடியாக உள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் உயர்வு
Published on

சென்னை:

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததை தொடர்ந்து பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

அந்த வகையில், சென்னையின் குடிநீர் ஆதாரமான செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

மொத்தம் 24 அடி கொள்ளளவு கொண்ட ஏரியில் நீர்மட்டம் 21.27 அடியை எட்டியுள்ளதால் அணையில் இருந்து 500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவான 3,645 மில்லியன் கனஅடியில் நீர் இருப்பு 2,926 மில்லியன் கன அடியாக உள்ளது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com