2025-ம் ஆண்டு அ.தி.மு.க.வுக்கு எழுச்சியான ஆண்டாக இருக்கும்: செல்லூர் ராஜூ

தமிழக மக்களுக்கு விடியல் கிடைப்பதற்கான பயணத்தை அ.தி.மு.க. முன்னெடுத்துச் செல்லும்.தமிழகம் அமைதி பூங்காவாக திகழ அ.தி.மு.க. ஆட்சி அமைய வேண்டும்.
2025-ம் ஆண்டு அ.தி.மு.க.வுக்கு எழுச்சியான ஆண்டாக இருக்கும்: செல்லூர் ராஜூ
Published on

மதுரை:

2025 புத்தாண்டை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தனது குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், 2025 ஆம் ஆண்டு அ.திமு.க.விற்கு எழுச்சியான ஆண்டாக இருக்கும். இந்த ஆண்டில் விடியா அரசிடமிருந்து தமிழக மக்களுக்கு விடியல் கிடைக்கும். தமிழக மக்களுக்கு விடியல் கிடைப்பதற்கான பயணத்தை அ.தி.மு.க. முன்னெடுத்துச் செல்லும்.

அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு ஏற்பட்ட வன்கொடுமை இனி தமிழகத்தில் எந்த பெண்ணுக்கும் நடக்கக்கூடாது. தமிழகம் அமைதி பூங்காவாக திகழ அ.தி.மு.க. ஆட்சி அமைய வேண்டும். சட்டமன்றத் தேர்தல் கூட்டணி அமைவதையும், ஒருங்கிணைந்த அ.தி.மு.க. தேர்தல் களத்தை சந்திப்பதையும் எடப்பாடி பழனிசாமி முடிவெடுப்பார். தமிழக மக்களுக்காக அரசியல் செய்யக்கூடிய கட்சியாக அ.தி.மு.க. திகழ்ந்து வருகிறது என 63 சதவீத மக்கள் வாக்களித்து உள்ளனர்.

2025 ஆண்டு அ.தி.மு.க.விற்கு எழுச்சி தருகிற ஆண்டாகவும் மகிழ்ச்சி தருகிற ஆண்டாகவும் திகழும். தி.மு.க. அரசு உண்மையாகவே மக்களுக்கு பொங்கல் பரிசு வழங்க வேண்டும் என்றால் ஒரு குடும்பத்திற்கு ரூ.30 ஆயிரம் பொங்கல் பரிசு வழங்க வேண்டும். அ.தி.மு.க. ஆட்சியில் 5,000 ரூபாய் வழங்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்களுக்கு உரிய இழப்பீடும், காப்பீடும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com