தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்த சீமான்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று மாலை நேரில் சந்தித்து பேசியுள்ளார்.நான் பசியால் மயக்கமடைந்தபோது எனது உடல்நலம் குறித்து விசாரித்தவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்த சீமான்
Published on

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று மாலை நேரில் சந்தித்து பேசியுள்ளார்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஸ்டாலின் வீட்டில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் சகோதரர் மு.க முத்து மறைவுக்கு சீமான் ஆறுதல் தெரிவித்தார்.

இதைதொடர்ந்து, செய்தியாளர்களுக்கு சீமான் பேட்டி அளித்த அவர்,"

அரசியலுக்கு அப்பால் இதுபோன்ற தருணங்களில் நடந்து கொள்வதுதான் நாகரிகம்.

கட்சி முரண்பாடுகளை கடந்து இத்தகைய தருணங்களில் தலைவர்கள் நடந்து கொள்வது இயல்புதான்.

நான் பசியால் மயக்கமடைந்தபோது எனது உடல்நலம் குறித்து விசாரித்தவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். எப்படி இருந்தாலும் ஒரு இழப்பு என்பது பெருந்துயரம்" என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com