பா.ஜ.க.-வோடு எடப்பாடி பழனிசாமி கூட்டணி அமைத்தது ஏன்? - சீமான் விளக்கம்

என்னை முன்னிறுத்தி தமிழக அரசியல் களம், சீமான் - தி.மு.க. இடையேதான் போட்டி என மாறிவிடுமோ என எடப்பாடி பழனிசாமிக்கு பயம். சசிகலா, டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து வெளியேற்றி விட்டார்.
பா.ஜ.க.-வோடு எடப்பாடி பழனிசாமி கூட்டணி அமைத்தது ஏன்? - சீமான் விளக்கம்
Published on

சென்னை:

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பாராளுமன்ற தேர்தலில் அண்ணாமலை அமைத்த கூட்டணியோடு எடப்பாடி பழனிசாமி நின்றிருந்தால், இன்று இங்கு 15 எம்.பிக்கள், 2 அமைச்சர்கள் கிடைத்திருப்பார்கள். ஆனால் அதை எடப்பாடி பழனிசாமி செய்யவில்லை.

என்னை முன்னிறுத்தி தமிழக அரசியல் களம், சீமான் - தி.மு.க. இடையேதான் போட்டி என மாறிவிடுமோ என எடப்பாடி பழனிசாமிக்கு பயம். அந்த வேலை நடக்கிறது என தெரிந்ததும் மீண்டும் பா.ஜ.க.வோடு போய் எடப்பாடி பழனிசாமி சேர்ந்துவிட்டார்.

சசிகலா, டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து வெளியேற்றி விட்டார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com