சென்னை உட்பட 2 மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

மோன்தா புயல் நாளை ஆந்திராவின் காக்கிநாடா அருகே கரையைக் கடக்க உள்ளது.காற்றுடன் கூடிய மிக கனமழை பெய்யும்
சென்னை உட்பட 2 மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை
Published on

வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் முழுமையாக தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த சில நாட்களாக சென்னையில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

இதனால் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி உள்ளிட்ட ஏரிகளில் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது.

இதற்கிடையே வங்கக் கடலில் உருவாகியுள்ள மோன்தா புயல் காரணமாக சென்னையில் இன்று தொடர் மழை பெய்து வருகிறது.

மோன்தா புயல் நாளை ஆந்திராவின் காக்கிநாடா அருகே கரையைக் கடக்க உள்ள நிலையில் பலத்த காற்றுடன் கூடிய மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை (அக்டோபர் 28) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே உத்தரவிட்டுள்ளார்.

அதேபோல, திருவள்ளூர் மாவட்டத்திலும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

புயலின் தாக்கத்தால் சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com