ராமதாஸை சந்தித்தது ஏன்? வினோத பதில் அளித்த சைதை துரைசாமி

தைலாபுரம் தோட்டத்திற்கு சென்னை முன்னாள் மேயரும், அ.தி.மு.க. முக்கிய நிர்வாகியான சைதை துரைசாமி வருகை தந்தார்.தயவு செய்து அரசியல் பேச வேண்டாம் என கூறி புறப்பட்டு சென்றார்.
ராமதாஸை சந்தித்தது ஏன்? வினோத பதில் அளித்த சைதை துரைசாமி
Published on

விழுப்புரம்:

தந்தை- மகனுக்கு இடையே ஏற்பட்ட மோதலால் பா.ம.க.வில் குழப்பம் நிலவி வருகிறது. சமாதானம் செய்ய முயன்ற நிர்வாகிகளை ராமதாஸ் சந்திப்பதை தவிர்த்து வந்தார். இந்த நிலையில், இன்று காலை தைலாபுரம் தோட்டத்திற்கு சென்னை முன்னாள் மேயரும், அ.தி.மு.க. முக்கிய நிர்வாகியான சைதை துரைசாமி வருகை தந்தார். அவர் ராமதாசை சந்தித்து பேசினார்.

இதன்பின் வெளியே வந்த சைதை துரைசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:- டி.என்.பி.எஸ்.சி-யில் தமிழகத்தில் முதலிடம் பிடித்த மாணவி வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர். கடலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவி முதலிடம் பிடித்ததற்காக ராமதாஸ் என்னை பாராட்டி இருந்தார். அதனால் ராமதாசை நேரில் சந்தித்து நன்றி கூறுவதற்காகவே வந்தேன்.

இதனிடையே, ராமதாஸ், அன்புமணி என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, தயவு செய்து அரசியல் பேச வேண்டாம் என கூறி புறப்பட்டு சென்றார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com