கவின் குடும்பத்திற்கு ரூ.6 லட்சம் நிவாரணம்- மாநில எஸ்.சி, எஸ்.டி ஆணையம் அறிவிப்பு

சென்னையில் ஐ.டி.ஊழியராக பணியாற்றி வந்தார்.பாளையங்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் காசி பாண்டியன் வழக்குப்பதிவு செய்தார்.
கவின் குடும்பத்திற்கு ரூ.6 லட்சம் நிவாரணம்- மாநில எஸ்.சி, எஸ்.டி ஆணையம் அறிவிப்பு
Published on

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலத்தை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மனைவி தமிழ்செல்வி. ஆசிரியை. இவர்களது மகன் கவின் செல்வ கணேஷ் (வயது 27). இவர் சென்னையில் ஐ.டி.ஊழியராக பணியாற்றி வந்தார்.

கடந்த 27-ந்தேதி தனது தாத்தாவை பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் பகுதியில் உள்ள சித்த மருத்துவமனைக்கு அழைத்து வந்தபோது அதே பகுதியை சேர்ந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தம்பதியான சரவணன்-கிருஷ்ண குமாரி ஆகியோரின் மகன் சுர்ஜித் (24) என்பவரால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக பாளையங்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் காசி பாண்டியன் வழக்குப்பதிவு செய்தார். உதவி கமிஷனர் சுரேஷ் விசாரணை நடத்தியதில் தனது சகோதரி சுபாஷினியுடனான காதலை கைவிட வலியுறுத்தி அதனை கேட்காத காரணத்தினால் கவினை சுர்ஜித் கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில், ஆணவக் கொலை செய்யப்பட்ட கவின் குடும்பத்திற்கு மாநில எஸ்.சி, எஸ்.டி ஆணையம் சார்பில் முதல் கட்ட இழப்பீடுத் தொகையாக ரூ.6 லட்சம் ஆணையத் தலைவர் தமிழ்வாணன் வழங்கினார்

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com