டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி முறைகேடு- விசாகனை அழைத்துச்சென்று அமலாக்கத்துறை விசாரணை

டாஸ்மாக் ஊழல் தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.காலையில் இருந்து அமலாக்கத்துறை சோதனை நடத்திய நிலையில் விசாகனை காரில் அழைத்துச் சென்றனர்.
டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி முறைகேடு- விசாகனை அழைத்துச்சென்று அமலாக்கத்துறை விசாரணை
Published on

சென்னையில் உள்ள டாஸ்மாக் நிறுவன அதிகாரிகளின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை, மணப்பாக்கம் சி.ஆர். புரத்தில் உள்ள டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் விசாகன் வீட்டில் துப்பாக்கி ஏந்திய வீரர்கள் பாதுகாப்புடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

மேலும் டாஸ்மாக் மேலாளர்கள் சங்கீதா மற்றும் ராமதுரை முருகன் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, தேனாம்பேட்டை, சூளைமேடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

இதேபோல் சென்னை, சூளைமேடு, கல்யாண புரத்தில் உள்ள எஸ்.என்.ஜே அலுவலகத்தில அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

டாஸ்மாக் ஊழல் தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி முறைகேடு புகாரில் விசாகனை அழைத்துச்சென்று அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.

டாஸ்மாக் மேலாண் இயக்குனர் விசாகன், அவரது மனைவியை அமலாக்கத்துறை அதிகாரிகள் அழைத்து சென்றனர்.

காலையில் இருந்து அமலாக்கத்துறை சோதனை நடத்திய நிலையில் விசாகனை காரில் அழைத்துச் சென்றனர்.

விசாகன் மற்றும் அவரது குடும்பத்தினரின் வங்கி கணக்குகளையும் அமலாக்கத்துறை ஆய்வு நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com