RRB தேர்வு ரத்து: இளைஞர்களின் நலனில் அக்கறை இல்லாத ரெயில்வே துறை - செல்வப்பெருந்தகை

தொழில்நுட்ப கோளாறு காரணமாக RRB தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிப்புரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், தமிழக இளைஞர்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும்.
RRB தேர்வு ரத்து: இளைஞர்களின் நலனில் அக்கறை இல்லாத ரெயில்வே துறை - செல்வப்பெருந்தகை
Published on

நாடு முழுவதும் இன்று நடைபெறவிருந்த ரயில்வே உதவி லோகோ பைலட் தேர்வு திடீரென ரத்து செய்யப்பட்டதால் தேர்வர்கள் அவதியடைந்தனர். இதனால், தமிழ்நாட்டில் இருந்து தெலங்கானாவுக்கு தேர்வு எழுதச் சென்ற 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தேர்வர்கள் விரக்தியடைந்தனர்.

இந்நிலையில், ரெயில்வேயின் இந்த திடீர் முடிவை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அவரது பதிவில், "இளைஞர்களின் நலனில் அக்கறை இல்லாத ரயில்வே துறை. நாட்டில் இளநிலை நீட், யுஜிசி நெட் தேர்வு வினாத்தாள் கசிவால் ஏறத்தாழ 85 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டிருப்பதாக தலைவர் ராகுல்காந்தி அவர்கள் பதிவுசெய்தார். வினாத்தாள் கசிவிற்கு பிறகு, தற்போது உதவி லோகோ பைலட் தேர்வை நடத்தும் ஆர்ஆர்பியானது, தொழில்நுட்ப காரணங்களால் தேர்வை ரத்து செய்திருப்பது அதிர்ச்சியை அளிக்கிறது.

தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு ஆந்திரா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் தேர்வு மையம் அமைத்ததிருந்த போதும் மிகுந்த சிரமத்துடன் இன்று தேர்வு எழுத சென்றவர்களை அலைக்கழித்துள்ளது ரயில்வே துறை.

எதிர்கால கனவுடன் தேர்வு எழுதச் சென்ற இளைஞர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் கனவுகளை சிதைக்கின்றது ஒன்றிய ரயில்வே துறை. இளைஞர்களுக்கு ஏற்பட்டிருக்கிற மனவுளைச்சலுக்கு ஒன்றிய ரயில்வே அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ்அவர்கள், இளைஞர்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும். அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவேண்டும்" என்று பதிவிட்டுள்ளார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com