கும்பகோணம் அருகே தொழிலாளி அடித்துக்கொலை- போலீசார் விசாரணை

போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் காளிதாஸ் அடித்து கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்தது. விசாரணை முடிவில் கொலையாளி யார் என்பது தெரியவரும்.
கொலை செய்யப்பட்ட காளிதாஸ்.
கொலை செய்யப்பட்ட காளிதாஸ்.
Published on

சுவாமிமலை:

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அடுத்த சுவாமிமலை அருகே உள்ள திருவலஞ்சுழி எம்.ஜி.ஆர் நகரை கிராமத்தை சேர்ந்தவர் காளிதாஸ் (வயது 36). கூலி தொழிலாளி. இவர் மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

காளிதாசுக்கு குடிப்பழக்கம் அதிகம் இருந்து வந்தது. இதனால் அவர் எப்போதும் குடிபோதையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று காலை வீட்டு வாசலில் தலையில் பலத்த காயத்துடன் காளிதாஸ் இறந்து கிடந்தார். இதனை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து சுவாமிமலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு பார்வையிட்டனர்.

அதில் தலையில் ரத்த காயம் இருந்தது. தொடர்ந்து போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் காளிதாஸ் அடித்து கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காளிதாசை கொலை செய்தது யார்? என்ன காரணம்? என்ற பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிவில் கொலையாளி யார் என்பது தெரியவரும். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதனிடையே காளிதாசின் சகோதரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com