கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்- விரையும் 3 மாநில பேரிடர் மீட்புப்படை

கோவை, நீலகிரி மாவட்டங்களில் அதிகனமழை முதல் மிக அதிகனமழைக்கான ரெட் அலெர்ட்.கண்காணிப்பு அலுவலர்களான மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் மாவட்டங்களுக்கு செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது.
கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்- விரையும் 3 மாநில பேரிடர் மீட்புப்படை
Published on

மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி வருகின்ற 27-ந்தேதி வாக்கில் உருவாக இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால், தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளத கூறப்பட்டுள்ளது.

கோவை, நீலகிரி மாவட்டங்களில் அதிகனமழை முதல் மிக அதிகனமழைக்கான ரெட் அலெர்ட் அறிவிக்கப்பட்டுள்ளதால், மாவட்ட ஆட்சியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முன்னேற்பாடுகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள் பேரிடர் மேலாண்மை துறை ஆலோசனை நடத்தியுள்ளது. அனைத்து துறைகளும் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன் எதிரொலியால், கோவை, நீலகிரிக்கு 3 மாநில பேரிடர் மீட்பு படையும், ஊட்டி, வால்பாறைக்கு தலா ஒரு தேசிய பேரிடர் மீட்பு படையும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

தீயணைப்புதுறை, மின்சாரம், நெடுஞ்சாலைத்துறை என அனைத்து துறைகளும் தயார் நிலையில் இருக்க ரெட் அலர்ட் விடுக்கப்பட்டதை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், கண்காணிப்பு அலுவலர்களான மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் மாவட்டங்களுக்கு செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com