பா.ம.க. இளைஞரணி தலைவராக முகுந்தன் நியமனம்- ராமதாஸ் திட்டவட்ட அறிவிப்பு

எங்கள் கட்சி ஜனநாயக கட்சி, பொதுக்குழுவில் காரசாரமான விவாதங்கள் எல்லா கட்சியிலும் நடப்பதுதான்.பா.ம.க. பொதுக்குழுவில் அறிவித்தபடி முகுந்தனிடம் நியமன கடிதத்தை வழங்கிவிட்டதாக ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பா.ம.க. இளைஞரணி தலைவராக முகுந்தன் நியமனம்- ராமதாஸ் திட்டவட்ட அறிவிப்பு
Published on

விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில் கடந்த வாரம் நடைபெற்ற பா.ம.க.வின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், காலியாக உள்ள இளைஞர் சங்கத் தலைவர் பதவிக்கு, பரசுராமன் முகுந்தன் என்பவரை அறிவித்தார்.

இளைஞர் அணி தலைவராக முகுந்தனை முன்மொழிந்து பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணிக்கு உறுதுணையாக இருப்பார் என்று ராமதாஸ் பேசிக் கொண்டிருந்தபோது மேடையில் இருந்த அன்புமணி இடைமறித்து அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

உடனே குறுக்கிட்ட டாக்டர் ராமதாஸ், ''இது நான் ஆரம்பித்த கட்சி. நான் சொல்வதைத்தான் கேட்கணும், கேட்காவிட்டால் யாரும் இந்த கட்சியில் இருக்க முடியாது. இல்லாவிட்டால் போங்கள் என்றார்.

இதனால் ஆத்திரமடைந்த டாக்டர் அன்புமணி, மேடையில் ஜி.கே.மணியிடம் இருந்து மைக்கை வாங்கி, 'நான் பனையூரில் கட்சி அலுவலகம் அமைத்துள்ளேன். விருப்பம் உள்ளவர்கள் அங்கு வந்து என்னை சந்திக்கலாம்' என்று ஆவேசமாக கூறினார்.

தொடர்ந்து அந்த மைக்கை தூக்கி வீசிவிட்டு கோபத்துடன் மண்டபத்தை விட்டு வெளியேறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பா.ம.க. உட்கட்சி மோதல் தொடர்பாக திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாசை பா.ம.க. தலைவர் அன்புமணி கடந்த 29-ந்தேதி சந்தித்து பேசினார்.

பின்னர் அன்புமணி கூறுகையில், எங்கள் கட்சி ஜனநாயக கட்சி, பொதுக்குழுவில் காரசாரமான விவாதங்கள் எல்லா கட்சியிலும் நடப்பதுதான், எங்களுக்கு ஐயா, ஐயா தான், எங்கள் உட்கட்சி பிரச்சனையைப் பற்றி நீங்கள் பேச எதுவும் தேவை இல்லை, அது எங்கள் பிரச்சனை, நாங்கள் பேசிக்கிறோம் என்று தெரிவித்தார்.

இந்நிலையில் பா.ம.க. இளைஞரணி தலைவராக முகுந்தன் நியமிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

பா.ம.க. பொதுக்குழுவில் அறிவித்தபடி முகுந்தனிடம் நியமன கடிதத்தை வழங்கிவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com