#RajyasabhaElection : வேட்பு மனுவை தாக்கல் செய்தார் அன்புமணி

தி.மு.க. கூட்டணியில் மொத்தமுள்ள 4 இடங்களில் தி.மு.க.-2, காங்கிரஸ்-1, தே.மு.தி.க.-1 இடங்களில் போட்டியிடுகிறது.அ.தி.மு.க. கூட்டணியில் அ.தி.மு.க.-1, பா.ம.க.-1 ஆகிய இடங்களில் போட்டியிடுகிறது
#RajyasabhaElection : வேட்பு மனுவை தாக்கல் செய்தார் அன்புமணி
Published on

தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை பதவிகளுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும். தி.மு.க. கூட்டணியில் மொத்தமுள்ள 4 இடங்களில் தி.மு.க.-2, காங்கிரஸ்-1, தே.மு.தி.க.-1 இடங்களில் போட்டியிடுகிறது.

அதேபோல் அ.தி.மு.க. கூட்டணியில் அ.தி.மு.க.-1, பா.ம.க.-1 ஆகிய இடங்களில் போட்டியிடுகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய தீவிரம் காட்டுகின்றனர்.

அந்த வகையில், மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்காக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

அதிமுக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்ட நிலையில் அன்புமணி ராமதாஸ் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

அதன்படி, சென்னை தலைமைச் செயலகத்தில் அன்புமணி ராமதாஸ், தம்பிதுரை இருவரும் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com