தமிழகத்தில் ஜூன் 19 ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல்

அன்புமணி, வைகோ, உள்ளிட்ட 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைகிறது. ஜூன் 2 ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது.
தமிழகத்தில் ஜூன் 19 ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல்
Published on

தமிழ்நாட்டில் காலியாக 6 மாநிலங்களவை இடங்களுக்கு ஜூன் 19 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அன்று மாலை 5 மணிக்கே தேர்தல் முடிவுகள் வெளியாகும்.

அன்புமணி, வைகோ, அப்துல்லா , வில்சன், சண்முகம், சந்திரசேகர் ஆகிய 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஜூலை 24 ஆம் தேதியோடு முடிவடைகிறது.

ஜூன் 2 ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கும். ஜூன் 9 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். ஜூன் 10 ஆம் தேதி மனுக்கள் பரிசீலனை செய்யப்படும். ஜூன் 12 ஆம் தேதி மனுக்களை திரும்ப பெற கடைசி நாளாகும்.

ஒருவேளை போட்டி இருக்கும் பட்சத்தில் ஜூன் 19 தேர்தல் நடத்தப்பட்டு அன்று மாலை 5 மணிக்கு முடிவுகள் வெளியிடப்படும். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com