சென்னை உட்பட 17 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், சென்னையிலும் நேற்று நள்ளிரவு முதல் மழை பெய்து வருகிறது.
சென்னை உட்பட 17 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
Published on

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக நாளை வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில், லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

அதன்படி, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், சென்னையிலும் நேற்று நள்ளிரவு முதல் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் இன்று காலை 10 மணிவரை 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, விருதுநகர், திண்டுக்கல், தேனி, மதுரை, திருப்பூர், நீலகிரி, கோவை, விழுப்புரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 10 மணிவரை மழை பெய்யலாம் என கூறப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com