வந்தே பாரத் ரெயிலின் காலை உணவில் அசைவம் நீக்கம்? - ரெயில்வே விளக்கம்

சென்னையில் இருந்து பல் நகரங்களுக்கு வந்தே பாரத் ரெயில் இயக்கப்படுகிறது. வந்தே பாரத் ரெயிலில் அசைவ உணவு நீக்கப்பட்டதாக பயணிகள் புகார் தெரிவித்தனர்.
வந்தே பாரத் ரெயிலின் காலை உணவில் அசைவம் நீக்கம்? - ரெயில்வே விளக்கம்
Published on

சென்னையில் இருந்து நாகர்கோவில், திருநெல்வேலி, மைசூரு, பெங்களூரு போன்ற நகரங்களுக்கு வந்தே பாரத் ரெயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில்,சென்னையில் இருந்து புறப்படும் வந்தே பாரத் ரெயிலில் விருப்பமான உணவை தேர்ந்தெடுக்கும் பகுதியில் காலை உணவிற்கான மெனுவில் அசைவ உணவிற்கான ஆப்சனை முன் அறிவிப்பின்றி ரெயில்வே நீக்கியதாக பயணிகள் புகார் தெரிவித்தனர்.

ஐ.ஆர்.சி.டி.சி. செயலியில் வந்தே பாரத் ரெயிலுக்கான டிக்கெட் முன்பதிவு செய்யும் பகுதியில் மதிய உணவு மற்றும் இரவு உணவிற்கு மட்டுமே அசைவ உணவு ஆப்சன் காட்டப்படுவதாக பயணிகள் புகார் கூறினர்..

இந்நிலையில், வந்தே பாரத் ரெயில்களில் காலை உணவில் அசைவ உணவு நீக்கப்பட்டதாக வெளியான தகவலுக்கு ரயில்வே நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது. ரெயில்களில் மூன்று வேளையும் அசைவ உணவு வழங்கப்படுவதாக ரெயில்வே விளக்கம் அளித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com