தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார் ஜனாதிபதி திரவுபதி முர்மு

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்கிறார்.கடந்தாண்டு மோசமான வானிலை காரணமாக ஜனாதிபதியின் வருகை கடைசி நேரத்தில் ரத்தானது.
தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
Published on

திருவாரூர் மாவட்டம் நீலக்குடியில் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா வருகிற செப்டம்பரில் நடைபெற உள்ளது.

செப்டம்பர் 3-ந்தேதி நடைபெறும் 10-வது பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்பார் என தமிழ்நாடு பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் ஜனாதிபதி திரவுபதி முர்மு மாணவ-மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்க உள்ளார்.

கடந்தாண்டு மோசமான வானிலை காரணமாக ஜனாதிபதியின் வருகை கடைசி நேரத்தில் ரத்தான நிலையில் இந்த ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com