அரசியலில் விஜயகாந்த் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது: பிரேமலதா பேட்டி

விஜயகாந்த் பிறந்தநாளை வறுமை ஒழிப்பு தினமாக தே.மு.தி.க. கடைபிடித்து வருகிறது. பொதுச் செயலாளர் பிரேமலதா ஏழை, எளியோருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அரசியலில் விஜயகாந்த் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது: பிரேமலதா பேட்டி
Published on

சென்னை:

விஜயகாந்த் பிறந்தநாளை வறுமை ஒழிப்பு தினமாக தே.மு.தி.க. கடைபிடித்து வருகிறது. சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் நேற்று விஜயகாந்த் பிறந்தநாள், வறுமை ஒழிப்பு தினமாகக் கொண்டாடப்பட்டது. அப்போது, கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா ஏழை, எளியோருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அதன்பின்னர் நிருபர்களிடம் பிரேமலதா கூறியதாவது:

இப்போது தான் விஜய் உங்களுக்கு பெரியதாக தெரிகிறார். ஆனால், விஜய் சிறிய பையனாக இருந்ததில் இருந்தே பார்த்து வருகிறோம். என்னை பொருத்தவரையில் அவர் எனது மகன் போன்றவர். அவருக்காக 'செந்தூரபாண்டி' படத்தில் விஜயகாந்த் நடித்து கொடுத்தார். இன்று அவர் நன்றாக இருக்கிறார். அதற்கு என்னுடைய வாழ்த்துகள். அதற்காக அவர் விஜயகாந்த் படத்தை அரசியலுக்காகப் பயன்படுத்தினால் அதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com