பொள்ளாச்சி பாலியல் வழக்கு: புனிதர் வேடம் தரிக்க முயல்கிறார் இ.பி.எஸ். - ஆர்.எஸ்.பாரதி

பொள்ளாச்சி பாலியல் வழக்கு குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அதிமுக எவ்வளவு அரசியல் கேவலங்களை அரங்கேற்றினாலும் இறுதியில் உண்மை மட்டுமே வெல்லும்.
பொள்ளாச்சி பாலியல் வழக்கு: புனிதர் வேடம் தரிக்க முயல்கிறார் இ.பி.எஸ். - ஆர்.எஸ்.பாரதி
Published on

பொள்ளாச்சியில் நடந்த கூட்டு பாலியல் வழக்கு தமிழகத்தில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய வழக்குகளில் ஒன்று. ஒரு கல்லூரி மாணவி மற்றும் பெண்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து ஆபாச வீடியோ எடுத்து துன்புறுத்தப்பட்டனர். இந்த சம்பவம் கடந்த 2019-ம் ஆண்டு நடந்தது.

இந்த வழக்கில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி விசாரணை மேற்கொண்டு திருநாவுக்கரசு (வயது 25), சபரிராஜன் (25), சதீஷ் (28), வசந்தகுமார் (27), மணிவண்ணன் (28), ஹெரன்பால் (29), பாபு (27), அருளானந்தம் (34) மற்றும் அருண்குமார் ஆகிய 9 பேரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

இந்த வழக்குக்கான தீர்ப்பை நீதிபதி நந்தினி தேவி அறிவித்தார். அதில் பொள்ளாச்சி கூட்டு பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என்று அறிவித்தார். குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மொத்தமாக ரூ.85 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் என வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

இதனையடுத்து, பொள்ளாச்சி பாலியல் வழக்கு தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட எடப்பாடி பழனிச்சாமி, "நடுநிலையோடு CBI விசாரணைக்கு உத்தரவிட்டேன். அதற்கான நீதியே இன்று கிடைத்துள்ளது என்று தெரிவித்தார்.

இந்நிலையில், "சிபிஐ கேடயத்தைத் தூக்கி புனிதர் வேடம் தரிக்க முயல்கிறார் பழனிசாமி" என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நடுநிலையோடு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டேன். அதற்கான நீதியே இன்று கிடைத்துள்ளது' என சிபிஐ கேடயத்தைத் தூக்கி புனிதர் வேடம் தரிக்க முயல்கிறார் பழனிசாமி.

திமுக உள்ளிட்ட கட்சிகள், மகளிர் அமைப்புகள் போராட்டங்கள் நடந்திய நிலையிலும் வழக்கை சிபிஐ-க்கு மாற்றவில்லை; 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்திவிடுமோ என அஞ்சியே சிபிஐ விசாரணைக்கு அதிமுக அரசு பரிந்துரைத்தது

பொள்ளாச்சி பாலியல் வழக்குத் தீர்ப்பை வரவேற்று அறிக்கை விட்டிருக்கும் அதிமுக, தன்னை தூயவன் போலக் காட்ட முயல்கிறது. அதிமுக எவ்வளவு அரசியல் கேவலங்களை அரங்கேற்றினாலும் இறுதியில் உண்மை மட்டுமே வெல்லும்.

என்று தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com