தம்பதியினரை தாக்கிய தனியார் சொகுசு பஸ் டிரைவர்கள் - 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு

ஆட்டோவில் வந்த செல்வன் மீண்டும் பஸ்சில் ஏறியதும், டிரைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.தாக்குதலில் காயமடைந்த செல்வன் மற்றும் ஆன்சி தம்பதியினர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
தம்பதியினரை தாக்கிய 2 டிரைவர்களை காணலாம்.
தம்பதியினரை தாக்கிய 2 டிரைவர்களை காணலாம்.
Published on

திண்டிவனம்:

சென்னை கோயம்பேட்டில் இருந்து நாகர்கோவிலுக்கு தனியார் சொகுசு பஸ் ஒன்று சென்றது. இதில் நாகர்கோவிலை சேர்ந்த செல்வன், அவரது மனைவி ஆன்சி, குழந்தை மற்றும் உறவினர் ரிஷாந்த் ஆகியோர் பயணம் செய்தனர்.

இந்நிலையில் கிளாம்பாக்கத்தில் செல்வன் குழந்தைக்கு உணவு வாங்குவதற்காக பஸ்சில் இருந்து கீழே இறங்கினார். பின்னர் செல்வன் வருவதற்குள் டிரைவர் பஸ்சை இயக்கினார். இந்த சம்பவத்திற்கு பின்னர், ஆட்டோவில் வந்த செல்வன் மீண்டும் பஸ்சில் ஏறியதும், டிரைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

அதன் பின்னர் பஸ் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள ஒரு உணவகத்தில் இரவு உணவிற்காக நிறுத்தப்பட்டது. அங்கு, பஸ் டிரைவர் மற்றும் அவருடன் இருந்த 5 பேர் சேர்ந்து இரும்பு கம்பி, உருட்டுக்கட்டை மற்றும் தடியால் செல்வன், ஆன்சி தம்பதியினர் மற்றும் அவருடன் வந்த அவரது உறவினர் ரிஷாந்த் ஆகியோரை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து விக்கிரவாண்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். இந்த தாக்குதலில் காயமடைந்த செல்வன், ஆன்சி தம்பதியினர் கொடுத்த புகார் பேரில் போலீசார் பஸ்சை போலீஸ் நிலையத்திற்கு எடுத்து சென்றனர்.

மேலும் தம்பதியினரை தாக்கியதாக கூறப்படும் டிரைவர்களான திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் மற்றும் தென்காசி மாவ ட்டம் திருச்சிற்றம்பலம் பகுதியை சேர்ந்த ராம கிருஷ்ணன் உள்ளிட்ட 5 பேர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

தாக்குதலில் காயமடைந்த செல்வன் மற்றும் ஆன்சி தம்பதியினர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மேலும் மாற்று பஸ் டிரைவர் மூலம் பஸ் நாகர்கோவிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com