முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த பினராயி விஜயன்

மு.க.ஸ்டாலினுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்மக்கள் நலனுக்கான உங்கள் அர்ப்பணிப்பு தொடர்ந்து உத்வேகத்தை அளிக்கிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த பினராயி விஜயன்
Published on

தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 73-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பிறந்தநாளையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, கருணாநிதி மற்றும் வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து கோபாலபுரத்தில் உள்ள இல்லத்திற்கு சென்று தாய் தயாளு அம்மாளிடம் ஆசி பெற்றார்.

பிறந்தநாளையொட்டி மு.க.ஸ்டாலினுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கேரளா முதலமைச்சர் பினராயி விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "எனது அன்பு சகோதரரும், மாண்புமிகு தமிழக முதல்வருமான திரு. மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள். மக்கள் நலனுக்கான உங்கள் உறுதியான தலைமைத்துவமும் அர்ப்பணிப்பும் தொடர்ந்து உத்வேகத்தை அளிக்கிறது. இந்த சந்தர்ப்பத்தில், நமது நாட்டின் ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற நெறிமுறைகளைப் பிரிவினைவாத சக்திகளுக்கு எதிராகப் பாதுகாப்பதில் நீங்கள் கொண்டுள்ள உறுதியை நான் வணங்குகிறேன். நமது நாட்டை வரையறுக்கும் அரசியலமைப்பு விழுமியங்களை நிலைநிறுத்த நாம் ஒன்றிணைந்து நிற்கும்போது, இந்த ஆண்டு உங்களுக்கு நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் மக்களுக்கு சேவை செய்வதில் தொடர்ச்சியான வெற்றிக்கு வாழ்த்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com