பரந்தூர் மக்களே நம்பிக்கையோடு இருங்கள் நாளை நமதே..!- த.வெ.க. தலைவர் விஜய்

பரந்தூரில் 1000 நாட்களை கடந்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கடந்த ஜனவரி மாதம் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
பரந்தூர் மக்களே நம்பிக்கையோடு இருங்கள் நாளை நமதே..!- த.வெ.க. தலைவர் விஜய்
Published on

சென்னையின் 2-வது புதிய விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் சுமார் 5300 ஏக்கரில் அமைய உள்ளது. இதற்காக பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட சுற்றி உள்ள 13 கிராமங்களில் இருந்து நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளது. புதிய விமான நிலையத்திற்கு நிலம் கையகப்படுத்துவது தொடர்பான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.

பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 1000 நாட்களை கடந்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டத்தில் ஈடுபடும் கிராம மக்களையும் போராட்ட குழுவினரை தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கடந்த ஜனவரி மாதம் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

இந்நிலையில், 1000 நாட்களை கடந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கிராம மக்களுக்கு மீண்டும் நம்பிக்கையூட்டும் வகையில், தமிழக வெற்றக் கழக தலைவர் விஜய் பதிவு வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

மண்ணுரிமைக்காக, வாழ்வுரிமைக்காக ஆயிரம் நாட்களைக் கடந்து அறப் போராட்டம் நடத்தி வரும் என் பாசத்துக்குரிய பரந்தூர் மக்களே, நம்பிக்கையோடு இருங்கள், நாளை நமதே!

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com