இயற்கை வேளாண் மாநாடு - கோவை வந்தடைந்தார் பிரதமர் மோடி

ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் இருந்து தனி விமானம் மூலம் கோவை விமான நிலையத்திற்கு பிரதமர் மோடி வந்தடைந்தார்.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் நேரில் வரவேற்பு அளித்தனர்.
இயற்கை வேளாண் மாநாடு - கோவை வந்தடைந்தார் பிரதமர் மோடி
Published on

கோவை கொடிசியா வளாகத்தில் தமிழ்நாடு இயற்கை வேளாண்மை கூட்டமைப்பு சார்பில் நடைபெறவுள்ள தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

இதற்காக ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் இருந்து தனி விமானம் மூலம் கோவை விமான நிலையத்திற்கு பிரதமர் மோடி வந்தடைந்தார். அங்கு அவருக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் அரசு அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் நேரில் வரவேற்பு அளித்தனர்.

பிரதமர் மோடியின் கார் மீது மலர்களைத்தூவி மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். விழா நடைபெறும் கோவை கொடிசியா மைதானத்திற்கு காரில் சென்ற பிரதமர் மோடிக்கு வழிநெடுகிலும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதையடுத்து பிரதமர் மோடி, இயற்கை வேளாண்மை மாநாட்டை தொடங்கி வைத்து, ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் 'பி.எம். கிசான்' திட்டத்தில் 21-வது தவணையாக 9 கோடி விவசாயிகளுக்கு ரூ.18 ஆயிரம் கோடி உதவித்தொகையை வழங்குகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com