நீலகிரி, கோவைக்கு ஆரஞ்ச் அலர்ட்: முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவு

8 மாவட்டங்களில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு மாநில பேரிடர் மீட்பு படையை பொறுத்தவரையில் நீலகிரிக்கு 3 குழுக்களும் கோவைக்கு 2 குழுக்களும் சென்றுள்ளனர்.
நீலகிரி, கோவைக்கு ஆரஞ்ச் அலர்ட்: முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவு
Published on

வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள், தேனி, திண்டுக்கல், தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திண்டுக்கல் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனவே இந்த மாவட்ட கலெக்டர்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும் கோவை, நீலகிரியில் கனமழை எச்சரிக்கை பெய்ய வாய்ப்பு இருப்பதால் தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு மாநில பேரிடர் மீட்பு படையை பொறுத்தவரையில் நீலகிரிக்கு 3 குழுக்களும் கோவைக்கு 2 குழுக்களும் சென்றுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com