அஜித்குமார் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்த ஓ.பி.எஸ்.

சி.பி.ஐ. விசாரணைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.அஜித்குமாரின் தாய் மாலதி, தம்பி நவீனுக்கு ஓ.பி.எஸ் ஆறுதல் தெரிவித்தார்.
அஜித்குமார் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்த ஓ.பி.எஸ்.
Published on

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்திரகாளி அம்மன் கோவில் காவலாளியாக பணியாற்றி வந்த அஜித்குமார், காவல்துறையினர் தாக்குதலில் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இச்சம்பவத்திற்கு கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், இவ்வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதற்கிடையே, அஜித்குமாரின் வீட்டிற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனர்.

இந்த நிலையில், போலீசாரால் அடித்துக் கொல்லப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித்குமாரின் வீட்டிற்கு நேரில் சென்று ஓ.பன்னீர் செல்வம் ஆறுதல் தெரிவித்தார். பின்னர், அஜித்குமாரின் படத்திற்கு மாலை அணிவித்து ஓபிஎஸ் அஞ்சலி செலுத்தினார். 

அஜித்குமாரின் தாய் மாலதி, தம்பி நவீனுக்கு ஓ.பி.எஸ் ஆறுதல் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com