முதல்முறையாக திமுக மாநாட்டில் பங்கேற்ற ஓபிஎஸ் - உற்சாகத்துடன் வரவேற்ற அமைச்சர்கள்

தமிழ்நாட்டின் முதலமைச்சராக மூன்றுமுறையும், துணை முதலமைச்சராக ஒருமுறையும் இருந்துள்ளார். திமுகவில் இணைவதற்கு முன்பு தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.
முதல்முறையாக திமுக மாநாட்டில் பங்கேற்ற ஓபிஎஸ் - உற்சாகத்துடன் வரவேற்ற அமைச்சர்கள்
Published on

திருச்சி சிறுகனூரில் திமுகவின் 12வது மாநில மாநாடு இன்று நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என லட்சக்கணக்கானோர் கலந்துகொண்டனர். இந்நிலையில் இம்மாநாட்டில் சமீபத்தில் திமுகவில் தன்னை இணைத்துக்கொண்ட தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ்-ம் கலந்துகொண்டார்.

மாநாட்டு மேடைக்கு ஓ. பன்னீர்செல்வம் வந்தபோது, அங்கு இருந்த திமுக அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் எழுந்து நின்று அவரை உற்சாகத்துடன் வரவேற்றனர். நீண்டகாலமாக அதிமுகவில் இருந்த ஓபிஎஸ் திமுக மாநாட்டில் பங்கேற்பது இதுவே முதல்முறையாகும். மாநாட்டு மேடையின் முதல் வரிசையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அருகில் ஓபிஎஸ் அமர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், "ஸ்டாலின் தொடரட்டும் - தமிழ்நாடு வெல்லட்டும்" என்ற தலைப்பில் திமுகவின் பலத்தை பறைசாற்றும் விதமாக இந்த எழுச்சி மாநாடு நடத்தப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com