#TNAssemblyElection தி.மு.க. சார்பில் போட்டியிட ஓ.பி.எஸ்., ஓ.பி.ரவீந்திரநாத் விருப்ப மனு

அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட விருப்ப மனுக்களை அளித்து வருகிறார்கள். தி.மு.க. நிர்வாகிகள் பலரும் ஆர்வத்துடன் விருப்ப மனுக்களை வழங்கி வருகிறார்கள்.
#TNAssemblyElection தி.மு.க. சார்பில் போட்டியிட ஓ.பி.எஸ்., ஓ.பி.ரவீந்திரநாத் விருப்ப மனு
Published on

தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. சார்பில் வேட்பாளர்களாக போட்டியிட விரும்புகிறவர்களிடம் இருந்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் கடந்த மாதம் 20-ந்தேதி முதல் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. தற்போதைய அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட விருப்ப மனுக்களை அளித்து வருகிறார்கள்.

அதேபோன்று தி.மு.க. நிர்வாகிகள் பலரும் ஆர்வத்துடன் விருப்ப மனுக்களை வழங்கி வருகிறார்கள். இதனிடையே தி.மு.க.வில் விருப்ப மனு அளிப்பதற்கு இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது. இதனால் அண்ணா அறிவாலயத்தில் இன்று வழக்கதை விட கூட்டம் அலைமோதுகிறது.

இதனிடையே தி.மு.க. சார்பில் போடி நாயக்கனூர் தொகுதியில் போட்டியில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் விருப்பமனு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் போடி, ஆண்டிப்பட்டி ஆகிய தொகுதிகளில் போட்டியிட் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.ரவீந்திரநாத் விருப்பமனு அளித்தார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com